கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒதுக்கி வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு

கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒதுக்கி வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு
கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒதுக்கி வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு
Published on

கன்னித்தன்மை சோதனையை எதிர்த்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் தம்யாய்சிகர். இவர் கஞ்சர்பாட் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தினர், திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதற்கு எதிராக இளைஞர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். விவேக்கும் ஒருவர். இவர், ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.

ஐஸ்வர்யா கன்னித்தன்மை சோதனை செய்யவில்லை. இதற்கு அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ’’அது நமது பாரம்பரி யம். அதை செய்யாமல் விடுவது நமது கலாசாரத்தை களங்கப்படுத்துவதற்கு சமம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.  இதன் காரணமாக பஞ்சா யத்து கூடி, அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் விவேக்கின் பாட்டி உயிரிழந்தார். அந்த துக்க நிகழ்ச்சியில் தங்கள் சமூகத்தினர் கலந்துகொள்ளக் கூடாது என்று ஊர் நாட்டாமை உத்தரவிட்டதால் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதோடு அந்த பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாட லை சத்தமாக வைத்து நடனமாடியுள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த விவேக், இதுபற்றி அம்பேத்நாத் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர் பாக நாட்டாமை அவர் மகன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com