1968-ல் நடந்த விமான விபத்து... 1,800 உயர பனிமலையில் 4 இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு!

கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன ராணுவ வீரர்கள் 4 பேரின் உடல் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு
இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டெடுப்புஎக்ஸ் தளம்
Published on

கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன ராணுவ வீரர்கள் 4 பேரின் உடல் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1968ஆம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இந்திய இராணுவ வீரர்கள் பயணித்த விமானம் ஒன்று இமாச்சலப்பிரதேசத்தில் ரோத்தாங் கணவாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 98 இராணுவ வீரர்களும் 4 சிப்பந்திகளும் அடக்கம் (மொத்தம் 102 பேர் விமானத்தில் இருந்தனர்). விபத்துக்குப்பின் விமானத்தில் இருந்த இராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், இராணுவத்தினர் தொடர்ந்து அவர்களைத்தேடும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம்

இந்நிலையில் இராணுவ விமான விபத்துக்குள்ளான இமாச்சலப் பிரதேசத்தில் 1,800 அடி உயரப்பனி மலையில், கடந்த வாரம் வேறொருபணிக்காக சிலர் சென்றுள்ளனர். அப்போது, 56 வருடங்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன ராணுவ வீரர்கள் நான்கு பேரின் உடல் பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து அந்த உடல்களை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்களில் இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் தாமஸ் செரியன், மற்றொருவர் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த இ.எம்.தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. யார் இவர்கள், தற்போது இவர்களின் குடும்பத்தினர் என்ன செய்கின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்....

E.M.தாமஸ்:

E.M.தாமஸ்
E.M.தாமஸ்

கேரளா பத்தினம்திட்டாவைச் சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி சாரம்மா. இவர்களுக்கு மஞ்சின்மராய தாமஸ் மற்றும் பாபுமேத்யூ என்ற இரு பிள்ளைகள் இருந்த நிலையில் தாமஸ் தனது 21 வது வயதில் இராணுவத்தில் சேர்ந்துள்ளார். இராணுவ விமான விபத்திற்கு பிறகு, அவரது சகோதரர் பாபு மேத்யூக்கு அரசு வனத்துறையில் வேலை வழங்கியது.

தாமஸ் செரியன்:

தாமஸ் செரியன்
தாமஸ் செரியன்

கேரளா இலந்தூரைச் சேர்ந்தவர் தாமஸ் செரியன், இவர் தனது 12 வயதில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவரது சகோதரர் தாமஸ் வர்கீஸ் இவரைப்பற்றி கூறும் பொழுது, “1968ல் அண்ணன் பயணித்த இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அப்பா செய்தித்தாளில் படித்தது எனக்கு நினைவு இருக்கிறது. தாமஸ் செரியனுக்கு முன்னதாக தாமஸ் மேத்யூ என்ற ஒரு அண்ணன் இருந்தார். அவரும் ஒரு இராணுவவீரர்தான். அவரும் இராணுவத்தில் உயிரிழந்தார்.

அவரைப்பின்பற்றி தாமஸ் செரியனும் இராணுவத்தில் சேர்ந்தார். கடைசியாக நான் அவரை செங்கனூர் ரயில் நிலையத்தில் 1966ல் பார்த்ததுதான். தாமஸ் செரியன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி அவரது உடல் கிடைக்காத நிலையில், எனது அப்பாவும், அம்மாவும், அவரது உடல் எப்படியாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அப்பா, அம்மாவின் காலத்திற்கு பிறகு தற்பொழுதுதான் இவரின் உடல் கிடைத்து இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பள்ளி ஆசிரியை
பள்ளி ஆசிரியைமனோரமா

இதற்கிடையே பத்தனம்திட்டாவில் தாமஸ் செரியன் படித்த பள்ளியான கத்தோலிக்க பள்ளியின் 1957-63 காலகட்டத்தில் வகுப்புப் பதிவேட்டில் தாமஸ் செரியன் பெயர் இருப்பதை அப்பள்ளி பெருமையாக சுட்டிக்காட்டி உள்ள்து. மேலும் தாமஸ் செரியனின், புகைப்படத்தை இராணுவ அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு மொபைலில் முன்னதாக அனுப்பி வைத்தனர்.

மிகவும் சிரமங்களுக்கிடையில் 1800 அடி உயர் மலையில் இருந்து இறந்த 4 இராணுவ வீரர்களின் உடல்களை மீட்ட இராணுவத்தினர், “உடல்கள் அனைத்தும் சண்டிகருக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்படும்” என்ற தகவல் வெளிவந்துள்ளனர்.

கடந்த 2003-ல் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேறும் நிறுவனத்தைச்’ சேர்ந்த மலையேறுபவர்களால் இந்த விமான விபத்தில் சில சேதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து 2005, 2006, 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேடுதல் பணிகளில் முன்னணியில் இருந்த ராணுவ அமைப்பினர் இறந்தவர்களின் உடல்களை கண்டுபிடிக்க பல முயற்சிகளை செய்தனர். அதில் 2019-ல் மட்டும் 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நால்வரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இறந்த 102 பேரில், 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com