பண்டிகை நேரங்களில் ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து?

பண்டிகை நேரங்களில் ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து?
பண்டிகை நேரங்களில் ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து?
Published on

ரயில்களில் பண்டிகைகால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக ரயில்வே ஊழியர்களுக்கான விடுமுறைகளை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக ரயில்வேத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசிய போது, தீபாவளி, துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி அக்டோபர் 15 முதல் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் 3,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கூட்ட நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் பண்டிகை காலங்களில் அனைத்து ரயில்வே ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ப்ளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். கூட்டம் மிகுந்த நேரங்களில், பயணிகள் பாதுகாப்பிற்காக கூடுதல் பாதுகாப்புக் குழு அனைத்து ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்தப்படும் எனவும் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com