2வது அலையை காட்டிலும் 3ம் அலையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் - ஐ.சி.எம்.ஆர்.

2வது அலையை காட்டிலும் 3ம் அலையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் - ஐ.சி.எம்.ஆர்.
2வது அலையை காட்டிலும் 3ம் அலையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் - ஐ.சி.எம்.ஆர்.
Published on
செப்டம்பர் மற்றும் அக்டோபருக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் கொரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) எச்சரித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின், தொற்று நோய்ப் பிரிவுத் தலைவர் மருத்துவர் சமீரன் பாண்டா கூறுகையில், ''மூன்றாவது அலையை யாராலும் கணிக்க முடியாது. இப்போதைக்கு மாவட்ட அல்லது மாநில அளவிலான தரவுகளை வைத்தே பாதிப்பின் தீவிரத்தை கணிக்க முடியும். மாநிலங்கள் முன்கூட்டியே தளர்வுகளை அறிவித்துள்ளதால் புதிய திரிபு அடைந்த கொரோனா வைரஸ் உருவாகி தலைதூக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
செப்டம்பர் மற்றும் அக்டோபருக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் கொரோனா மூன்றாவது அலை தாக்கலாம். ஆனால், இரண்டாவது அலையை காட்டிலும் மூன்றாம் அலையின் தாக்கம் சற்று குறைவானதாக இருக்கலாம். முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாவட்டங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனில் அந்த மாவட்டங்கள் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அதேசமயம் அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டங்கள் 3-வது அலையின்போது பாதிப்பு குறைவாக பதிவாகக்கூடும்' என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com