மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 திங்கள் அதிகாலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் பிவாண்டியில் உள்ள படேல் காம்பவுண்ட் பகுதியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 39 ஆக உயர்ந்தது. மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்தைப் பார்வையிட்டதோடு, கட்டட விபத்துக்குள்ளான காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையையும் அவர் அறிவித்தார்.
தானே காவல்துறையின் குழுக்கள், பிவாண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி (பி.என்.எம்.சி) மற்றும் அண்டை நகரங்களின் தீயணைப்புப் பிரிவுகளும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.