377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு: ஸ்மிருதி இரானி

377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு: ஸ்மிருதி இரானி
377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு: ஸ்மிருதி இரானி
Published on

ஆபாச படங்கள், வீடியோக்கள் கொண்ட 377 இணையதள சேவைகள் மீது புகார் வந்திருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் ஆபாச படங்கள், வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். இதை ஆதரித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு, பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ள போதும் இதுபோன்ற ஆபாச படங்கள், வீடியோக்கள் குழந்தைகளை தொடர்ந்து பாதிப்பதாகவும் இதன் காரணமாக பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து பேசிய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இதுவரை இதுபோன்ற புகார்கள் தொடர்பாக 50 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அத்துடன் 377 இணையதள சேவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், அவற்றை நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com