கொரோனா காலகட்டத்தில் நாடெங்கும் 350 கோடி DOLO 650 மாத்திரைகள் விற்பனை

கொரோனா காலகட்டத்தில் நாடெங்கும் 350 கோடி DOLO 650 மாத்திரைகள் விற்பனை
கொரோனா காலகட்டத்தில் நாடெங்கும் 350 கோடி DOLO 650 மாத்திரைகள் விற்பனை
Published on

கொரோனா காலகட்டத்தில் நாடெங்கும் 350 கோடி DOLO 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் PARACETAMOL வகை மாத்திரைகள், கொரோனா காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஜிஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பான கால்பால் மாத்திரைகள் கடந்த 2021ஆம் ஆண்டில் 310 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் டோலோ 650 மாத்திரைகள் அதே ஆண்டில் 307 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகி 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக IQVIA நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விற்கப்பட்ட அனைத்து டோலோ 650 மாத்திரைகளையும், அடுக்கி வைத்தால் அது துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கல்ஃபாவை விட உயரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மாத்திரைகளில், டோலோ 650 மற்றும் CALPOL 650 மாத்திரைகள் இடம் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com