கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களில் 324 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் மது விற்பனை மற்ற நாட்களை விட அதிகமாகவே இருக்கும். தற்போது ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் மூலம் 300க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை 324 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 248 கோடி ரூபாய்க்கு மட்டும் மது விற்பனை நடைபெற்றிருந்ததாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 30 விழுக்காடு மது விற்பனை கூடியுள்ளது. இந்த ஆண்டு ஓண திருவிழா நாட்களில் மட்டுமே மொத்தமாக 700 கோடி ரூபாய்க்கு மதுபான வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக கேரள மதுபான கழகம் கூறியுள்ளது.
இதையும் படிக்க: `ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம்’- ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை