இளைஞரை கொன்று புதைத்து, தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கும்பல்!

இளைஞரை கொன்று புதைத்து, தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கும்பல்!

இளைஞரை கொன்று புதைத்து, தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கும்பல்!
Published on

பெண் பிரச்னை காரணமாக இளைஞர் ஒருவரை கொன்று புதைத்து, பிறகு மீண்டும் உடலைத் தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்டி குஜ்ஜார். அந்தப் பகுதியின் குஜ்ஜார் இனத் தலைவர். கடந்த மாதம் 19-ம் தேதி ஹோசியார்புர் நகரில் உள்ள குஜாலா கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் மன்சூர் அலியை சந்திக்கச் சென்றார். இதையடுத்து வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதனால் லட்டியின் தந்தை கசம் தின் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் லட்டியை ஒரு கும்பல் கடத்தியது தெரிய வந்தது. அவர் சென்ற வாகனம் ரத்தக் கறைகளுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் யார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வந்த போலீசார், ஷரீப் முகமது, யாகூப் கான், ஸஹூரா, ஜனைத் அலி, யாகூப் அலி, பஹா ஹுசைன் ஆகியோரை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக் தகவல்கள் வெளியாயின. 

(பரம்பால் சிங்)

லட்டியை கடத்தியது தாங்கள்தான் என்று தெரிவித்த அவர்கள் அவரை கொன்று புதைத்துவிட்டதாகக் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இடத்தைக் காண்பிக்க அழைத்தனர். அப்போது போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் கொன்று ஒரு இடத்தில் புதைத்துவிட்டு, சில நாட்களுக்குப் பின் லட்டியின் உடலைத் தோண்டி எடுத்துள்ளனர். பின்னர் சிறு சிறு துண்டு துண்டாக வெட்டி, கால்வாய் ஒன்றில் வீசியுள்ளனர். ஷாக் ஆன போலீசார், ஏன் இந்த கொடூர கொலைவெறி என்று விசாரித்தனர். 

கொலையாளிகளில் ஒருவரான ஷரீப் முகமதுவின் சகோதரன் சிறையில், இறந்துள்ளான். அவரது மனைவிக்கும் லட்டிக்கும் தொடர்பு ஏற்பட் டது. அதன் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் பிரச்னை இருந்தது. ஏற்கனவே ஒரு முறையை லட்டியை கொல்வதற்கான முயற்சி நடந்தது. அதில் இருந்து தப்பியுள்ளார். இப் போது தனியாக வந்து மாட்டியதால் கொன்று, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கால்வாயில் வீசி தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துள்ளனர். இத்தகவலை போலீஸ் அதிகாரி பரம்பால் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கொடூர கொலை தொடர்பாக ஷரீப் முகமதுவின் அப்பா நவாப்தீன், லட்டியின் நண்பர் லஹி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com