ராஜஸ்தானில், காரில் குழந்தையை மறந்துவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு பெற்றோர் சென்ற நிலையில், 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவில் உள்ள ஜோரவர்புரா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தானில் கோட்டவில் வசித்து வருகிறார் பிரதீப் நாகர் , இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும், இரண்டு குழந்தைகள் உள்ளது. சம்பவ தினத்தன்று பிரதீப் தனது மனைவி, மூத்த மகள், 3 வயதான இளைய மகள் கோர்விகா நாகர் ஆகியோரை காரில் அழைத்து கொண்டு ஜோரவர்புரா கிராமத்தில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிக்கு சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தவுடன் பிரதீப்பின் மனைவி மூத்த மகளுடன் காரில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால், 3 வயதான இளைய மகள் காரிலேயே இருந்துள்ளார். இதனை அறியாத பிரதீப் கோர்விகாவை அவரது மனைவி கூட்டு கொண்டு சென்று விட்டார் என்று எண்ணவே, காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று சுமார் 2 மணி நேரம் உறவினர்விகளுடன் செலவழித்துள்ளனர்.
கோர்விகா தனது மனவியுடன் இருப்பார் என பிரதீப்பும், பிரதீப்புடன் இருப்பார் என அவரின் மனைவியும் நினைக்க குழந்தையை தேட முயற்சிக்கவில்லை.
பிறகு இருவரிடமும் இல்லை என அறிந்து கொள்ளவே, குழந்தையை தேட துவங்கியுள்ளனர். இதனையடுத்து, காரில் வந்து பார்த்தபோது, காரின் கதவுகள் மூடப்பட்டநிலையில், குழந்தை உள்ளே மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று, பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தையின் இறப்பு குறித்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை எனவும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர்கள் மறுத்துவிட்டதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.