தெலங்கானா: 120 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..!

தெலங்கானா: 120 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..!
தெலங்கானா: 120 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..!
Published on

தெலங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிக்‌ஷபதி. அப்பகுதியில் கோடை காலம் என்பதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயம் செய்ய நீர் இல்லாத நிலையில் பிக்‌ஷபதி தன்னுடைய வயலில் புதிதாக ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார். இரண்டு இடங்களில் ஆழ்துளைக் கிணறு தோண்டியும் தண்ணீர் வராத நிலையில் மூன்றாவதாக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வந்துள்ளது. இதையடுத்து தண்ணீர் வராத 2 ஆழ்துளைக் கிணறுகளையும் பிக்ஷபதி அப்படியே விட்டுவிட்டார்.

இந்த நிலையில் பிக்‌ஷபதியின் மைத்துனர் கோவர்தனின் 3 வயது மகன் சாய்வர்தன் தன்னுடைய மாமா பிக்‌ஷபதி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகில் இருக்கும் பிக்‌ஷபதியின் விவசாய நிலத்தில் புதிதாக போடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருந்ததால் சிறுவன் கால் தவறி 120 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான்.

சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததை பார்த்த சிலர், கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனுடைய உறவினர்கள் ஆழ்துளைக் கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி சிறுவனை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். ஆழ்துளைக் கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்தில் சிக்கியிருருந்த நிலையில் சிறுவனை மீட்கும் முயற்சி எடுபடவில்லை. சிறுவன் மேலும் கீழே சென்றுவிட்டதாக தெரிகிறது. தற்போது சிறுவனை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com