இன்று காலையில் ஜம்மு-காஷ்மீரின் பேட்மாலூவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இந்த மோதலின்போது சிஆர்பிஎஃப் துணை கமாண்டன்ட் ஒருவர் காயமடைந்தார், இரு தரப்புக்கும் நடந்த மோதலில் பெண் ஒருவரும் உயிரிழந்தார்.
நேற்று நள்ளிரவில் பேட்மாலூ பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுக்குழு இப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பயங்கரவாதிகள் மறைந்திருந்த வீட்டை கூட்டுக்குழு சுற்றி வளைத்த நிலையில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சிஆர்பிஎஃப் துணை கமாண்டன்ட் ஒருவர் காயமடைந்தார், இரு தரப்புக்கும் நடந்த மோதலில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார்.
இறந்த பயங்கரவாதிகளின் அடையாளத்தை பாதுகாப்பு படையினர் இன்னும் வெளியிடவில்லை. இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில் " இந்த தாக்குதலில் ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார், சிஆர்பிஎஃப் துணைத் தளபதியும் புல்லட் காயம் பெற்று சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலின்போது கவுசர் என்ற பெண்மணி தோட்டாவால் தாக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்” என்று கூறினார்.