ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுஃப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவலர் ஒருவர் மரணமடைந்தார். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.