புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி: மத்திய அரசு ஒப்புதல்
Published on

கொரோனா காரணமாக 3 மாதங்களுக்கு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டிருந்தார். துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு‌ செய்தார். 

இந்த வழக்கில் அரசின் கொள்கை முடிவுகளுக்கு மாறாக மாற்று திட்டத்தை அறிவிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு இருந்தால் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என ஏற்கெனவே ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை எனவும் முதல்வர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே கொரானா காரணமாக 3 மாதங்களுக்கு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ஜூலை 23ம் தேதிக்குள் மத்திய அரசும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com