வாயு புயல் முன்னெச்சரிக்கை: மூன்று லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

வாயு புயல் முன்னெச்சரிக்கை: மூன்று லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
வாயு புயல் முன்னெச்சரிக்கை: மூன்று லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
Published on

"வாயு" புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் 3 லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள "வாயு" புயல் தீவிரமாகி குஜராத்தின் போர்பந்தர், மஹுவா பகுதியில் நாளை கரையைக் கடக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் 135 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், துவாரகா, ஜூனாகத், ராஜ்கோட், பாவ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதியில் மீனவர்கள் வரும் 15 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப் பட்டுள்ளது. கோவா மற்றும் கொங்கன் பகுதிகளிலும் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், வாயு புயல் குறித்த முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது‌. குஜராத் மற்றும் டையூவில் இன்று 3 லட்சம் பேரை, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல ஆணையிடப்பட்டது. இவர்கள் 70‌0 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

தேசியப் பேரிடர் மீட்புப்படையின் தலா 45 பேர் கொண்ட 39 குழுக்களும், இந்திய ராணுவத்தின் 34 குழுக்களும் புயல் முன்னெச்சரிக்கைப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள விஜயவாடாவிலிருந்து குஜராத்துக்கு வீரர்களை அழைத்துச் செல்ல, விமானப்படையின் சி 17 ரக விமானம் டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com