விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு : 3 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு : 3 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு : 3 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
Published on

 விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கைக்காக அப்பகுதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆலையை சுற்றியுள்ள 3 கி.மீ தூரத்திற்கு விஷவாயு பரவி உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வினய் சம்பவ இடத்திற்கு விரைந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், 2 மணி நேரத்திற்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார். மூச்சுத்திணறலால் அவதிபடுபவர்களுக்கு ஆக்ஸிஜன் வாயு கொடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com