கடந்த ஆண்டில் அதிவேகத்தால்  3.19 லட்சம் சாலை விபத்துகள் மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டில் அதிவேகத்தால் 3.19 லட்சம் சாலை விபத்துகள் மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டில் அதிவேகத்தால் 3.19 லட்சம் சாலை விபத்துகள் மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
Published on

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் நேரிட்ட 4.49 லட்சம் சாலை விபத்துகளில் 71 சதவீத விபத்துகள் அதிவேகம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் விகே. சிங் தெரிவித்தார்.

"மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, கடந்த 2019ம் ஆண்டில் 4,49,002 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 3,19,028 விபத்துகள் அதிவேகத்தில் ஏற்பட்டவை. மொத்த விபத்தில் அது 71.1 சதவீதம்" என எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டார்.

சாலை விபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அமைச்சர் வி.கே. சிங் சுட்டிக்காட்டினார். ஆண்டுதோறும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. உலகளவில் இது மிக அதிகம். இந்த விபத்துகளில் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். 3 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com