கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு திறனை பலமடங்கு பெற இரண்டாவது தடுப்பூசியை மக்கள் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்புக்கான உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 25ஆவது கூட்டத்தில் பேசிய அவர், மாநிலங்களுக்கு விரைவில் சுமார் 54 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கூறினார். மாநிலங்களுக்கு இதுவரை மத்திய அரசு 17 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியிருப்பதாகவும், அதில் 84 லட்சம் தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
மேலும், சுமார் 54 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருப்பதாக கூறிய அவர், கடந்த 7 நாட்களில் நாட்டின் 180 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார்.