பெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்

பெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்
பெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்
Published on

29 வயது கான்ஸ்டபிள் ஒருவர் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறி தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தாந்தி பிரதாப்(29). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்துள்ளார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் தற்போது தீடீரென தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். 

அதில், “சார்மினார் காவல் நிலையத்தில் சித்தாந்தி பிரதாப் என்னும் நான் சில கோரிக்கைகளை உங்களின் கவனத்திற்கு முன்வைக்கிறேன். நான் கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தேன். காவல்துறையில் எனக்கு ஏற்பட்ட அதீத ஈடுபாட்டின் பெயராலேயே இப்பணிக்கு வந்தேன். இதுவரை எனது கடமையை சிறப்பாக செய்துள்ளேன். எனினும் கடந்த சில மாதங்களாக என்னுடைய சீனியர் அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதை பார்த்து வருகிறேன். அவர்கள் பெரும்பாலும் 35 ஆண்டுகளுக்கு மேலாக கான்ஸ்டபிளாகவே பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணியில் உயர்வு கிடைக்காமல் சிறப்பு ஊதியம் மற்றும் கொடுத்து வந்தனர். ஆனால் எஸ்.ஐ மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் பணி உயர்வு பெற்று சகல வசதிகள் பெற்று வருகின்றனர். 

எனக்கு தற்போது 29 வயதாகிறது. நான் எனது திருமணத்திற்கு பெண் தேடி வருகிறேன். என்னை வரன் பார்த்த பெண் ஒருவர் நான் கான்ஸ்டபிள் என்பதால் என்னை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. அத்துடன் அப்பெண் என்னுடைய உறவினர்களிடம், “அவர் கான்ஸ்டபிளாக இருந்தால் கடைசி வரை கான்ஸ்டபிளாகவே இருப்பார். எனவே அவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லை” எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட பிறகு நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். இதனால் என்னுடைய பதவியை நான் ராஜினாமா செய்ய முடிவு எடுத்தேன். ஆகவே என்னுடைய ராஜினாமாவை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com