ரூ.28 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி! போலீஸிடம் நேர்மையாக ஒப்படைத்த கேரள மீனவர்கள்!

ரூ.28 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி! போலீஸிடம் நேர்மையாக ஒப்படைத்த கேரள மீனவர்கள்!
ரூ.28 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி! போலீஸிடம் நேர்மையாக ஒப்படைத்த கேரள மீனவர்கள்!
Published on

கடலில் கண்டெடுத்த ரூ.28 கோடி மதிப்புடைய திமிங்கலத்தின் வாந்தியை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர் கேரளாவை சேர்ந்த மீனவர்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 28.5 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் வாந்தியை கடலில் கண்டெடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலை கரைக்கு திரும்பியதும் கடலோர பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகளிடம் அது குறித்து தெரிவித்ததோடு அதனை ஒப்படைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.28 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நேர்மையாக ஒப்படைத்த மீனவர்களின் இந்த செயலை அதிகாரிகள் பாராட்டினர்.

திமிங்கலங்கள் கக்கும் வந்தி வாசனை திரவியம் தயாரிக்க, மருந்து மற்றும் மசாலாவாகவும் மேற்கத்திய நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் இதற்குள்ள மதிப்பு மிகவும் அதிகம். இந்தியாவில் திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் திமிங்கிலத்தின் வாந்தியை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

இதையும் படிக்க: டன் கணக்கில் இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா – கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com