மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் நிலவி வரும் வன்முறை, போராட்டங்களை கட்டுப்படுத்த மேலும் 90 பட்டாலியன் மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டதாக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருடப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி பழங்குடியினர் இடையே வன்முறை வெடித்தது. தற்போது வரை மாநிலத்தில் ஆங்காங்கே இரண்டு குழுவினரும் அவ்வப்போது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.