டெல்லியில் பைக் ரேஸில் ஈடுபட்ட 24 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியில் 3 இளைஞர்கள் உயர் ரக பைக்களில் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, பைக் ரேஸில் ஈடுபட்ட 24 வயது இளைஞரான ஹிமான்சுவின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த சாலையில் அதிவேகமாக சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமான்சு விபத்தில் சிக்கிய நிகழ்வை அவருடன் பைக் ரேஸில் ஈடுபட்ட காட்சிகளை மற்ற இளைஞர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் ரேஸ்களில் ஈடுபடுவது குற்றம் எனக் கூறப்பட்டாலும், இளைஞர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடந்து கொண்டே இருக்கிறது.