கர்நாடகா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் 24பேர் உயிரிழப்பு

கர்நாடகா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் 24பேர் உயிரிழப்பு
கர்நாடகா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் 24பேர் உயிரிழப்பு
Published on

ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் கர்நாடக மருத்துவமனையில் 24 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சோகச் சம்பவம் கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ் குமார், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, “ கர்நாடக மாநிலம் சாமராஜ் நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் கொரோனா நோயாளிகள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்தனர். நாங்கள் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக புகாரும் எழுந்தது. இதனையடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பிரதமர் நிவாரண நிதி மூலம் இந்தியாவில் 551 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com