(கோப்பு புகைப்படம்)
மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,387ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 1,749 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா. இங்கு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தாராவியில் மட்டும் நோய்த்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் 15 பேர் மும்பையில் வசிப்பவர்கள் ஆவர். இதனையடுத்து அவர்கள் வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது 23 பேரும் நலமுடன் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.