ஹரியானாவின் குருகிராமில் உள்ள DLF Phase-3 எனும் பகுதியில் உள்ள S ப்ளாக்கில், ஒரு வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளே ஒரு குழந்தை அழுதபடி உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தடயவியல் துறையினரையும் உடன் அழைத்து வந்த காவல் அதிகாரிகள் பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், உயிரிழந்தவர் ஆக்ராவை சேர்ந்த லக்ஷ்மி ராவத் என்ற 23 வயது பெண்மணி என்பதும் கௌரவ் ஷர்மாவை திருமணம் செய்து கொண்ட பின், 6 மாதத்திற்கு முன் குருகிராமிற்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அப்பெண்மணி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், நேற்று இச்சம்பவம் கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். பெண்மணியை கொலை செய்தது அவரது கணவராக இருக்கலாம் என்றும் அவர் தப்புயோடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
DLF பகுதியின் ACP விகாஷ் கௌஷிக் இதுகுறித்து கூறுகையில், அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாகவும், காணாமல் போன பெண்மணியின் கணவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.