வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் செல்லும் எதிர்க்கட்சிகள்!

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் செல்லும் எதிர்க்கட்சிகள்!
வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் செல்லும் எதிர்க்கட்சிகள்!
Published on

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக, 22 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையரை இன்று சந்திக் கின்றன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரு கின்றன. அதற்கு வலு சேர்ப்பது போல, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சையத் சுஜா என்ற தொழில்நுட்ப நிபுணர், இந்த இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்றும் தன்னிடம் சில கட்சிகள் முறைகேட்டில் ஈடுபடுமாறு கூறியதாகவும் தெரி வித்திருந்தார். இது பரபரப்பானது. 

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத் திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டம் நடைபெற்றது. அதில், உலகில் ஓரிரு நாடுகளில் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும், மற்ற நாடுகள் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பி விட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உட்பட 22 எதிர்க்கட்சிகள் இணைந்து வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக, இன்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்குச் சீட்டு முறையையே, மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

தேர்தல் ஆணையம், இந்தக் கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com