உத்தரப்பிரதேசத்தில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் 40 பேருக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவோ என்ற இடத்தில் செயல்பட்டு வந்த போலி மருத்துவர் ஒருவர், அவரிடம் வந்த நோயாளிகள் அனைவருக்கும் ஒரேயொரு ஊசியை பயன்படுத்தியிருக்கிறார். இதனால் 40 பேருக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே முறையான சோதனை மேற்கொண்டால் குறைந்தபட்சம் 500 பேர் வரை ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சுனில் பங்கார்மா தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் குறிப்பிட்ட சில நாட்களில் ஹெச்ஐ நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இந்தச் சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளளது. இந்தத் தகவலை தலைமை மருத்துவ அதிகாரி எஸ்பி சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.