இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழு முதல் எட்டு லட்சம் கோடி ரூபாய் அளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.
இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியிலிருந்து மீளும் அறிகுறிகள் தெரிய தொடங்கிய போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ள சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் அமைப்பு தற்போது 2020-21 ஆம் ஆண்டில் வளர்ச்சி மீண்டும் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும் என கணித்துள்ளது.
மற்றொரு ஆய்வு நிறுவனமான அக்யூட் ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும், 21 நாட்களில் 7.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்பட்டிருக்கும் என்றும் கணித்துள்ளது. இந்த ஊரடங்கால் போக்குவரத்து, ஹோட்டல், உணவகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளன.
முதல் 15 நாட்களிலேயே லாரி உரிமையாளார்கள் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததாக அகில் இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து இருப்பதாக தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.