2021ல் இதுவரை புனே நகர சாலை விபத்துகளில் 199 பேர் உயிரிழப்பு

2021ல் இதுவரை புனே நகர சாலை விபத்துகளில் 199 பேர் உயிரிழப்பு
2021ல் இதுவரை புனே நகர சாலை விபத்துகளில் 199 பேர் உயிரிழப்பு
Published on

2021 ஆம் ஆண்டில் இதுவரை புனே நகர சாலைகளில் நடந்த சாலை விபத்துகளால் 199 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அல்லது நவம்பர் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.  2021 ஆம் ஆண்டில் புனே நகர சாலைகளில் மட்டும் சாலை விபத்துகளால் 199 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. இப்பகுதியில் 2020 ஆம் ஆண்டு 143 உயிரிழப்புகளும், 2019 ஆம் ஆண்டு 206 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க மாநில அரசின் பல்வேறு பிரிவுகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும், இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறையவில்லை என்று போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. மோசமான சாலைகள், முழுமையடையாத சாலைகள், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவை ஆகியவையே நகரத்தில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கோவிட் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் அலுவலகங்கள் பூட்டப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு இறப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.  கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசிய புனே போக்குவரத்து டிசிபி ராகுல் ஸ்ரீராமே, “ இரு சக்கர வாகன ஓட்டிகளே அதிகளவில் விபத்தில் மரணமடைகின்றனர், 90 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த ஆண்டு சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com