உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.
உன்னாவ் பெண்ணை கடத்தி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து போராடி வந்தார்.
குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரூ25 லட்சம் அபராதம் விதித்தும் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.