காசோலை மோசடி வழக்கு - முன்னாள் எம்.பிக்கு சிறை தண்டனை உறுதி 

காசோலை மோசடி வழக்கு - முன்னாள் எம்.பிக்கு சிறை தண்டனை உறுதி 
காசோலை மோசடி வழக்கு - முன்னாள் எம்.பிக்கு சிறை தண்டனை உறுதி 
Published on

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுவுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடமிருந்து வாங்கிய 35 லட்ச ரூபாய் கடனுக்காக அன்பரசு அளித்த காசோலை பணமின்றி திரும்பியதால் அன்பரசு மற்றும் ராஜிவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு எதிராக போத்ரா என்பவர் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கில் அன்பரசுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. 

இதையடுத்து இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இரண்டு பேரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் தண்டனையை உடனே அமல்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com