தெருநாய்கள் கடித்ததில் 2 வயது குழந்தை மரணம்... டெல்லியில் நடந்த கொடூரம்!

டெல்லியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி
டெல்லிமுகநூல்
Published on

சமீபகாலமாக தெருநாய்களின் அச்சுறுத்தல் என்பது நாடு முழுவதும் பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. இதனால் பகல் நேரங்களிலும்கூட தெருவில் நடமாட முடியாத சூழல் மக்களுக்கு ஏற்படுகிறது. பலரும் தெருநாய்களின் அச்சுறுத்தலாலும், தாக்குதலாலும் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் பெரும் கொடுமையாக டெல்லியில் 2 வயது குழந்தை ஒருவர், தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் துக்லக் லேன், தோபிகாட் பகுதியில் திவ்யான்ஷி என்ற 2 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில், வீட்டின் அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த நான்கைந்து நாய்கள் திடீரென குழந்தையை தாக்கியுள்ளன. குழந்தையை தாக்கிய நாய்கள் அவரை 100-150 மீட்டர் தூரத்திற்கு இழுத்தும் சென்றுள்ளன.

இதனை கண்ட அவ்வழியே சென்ற சிலர் குழந்தையை காப்பாற்றி இது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதார்.

டெல்லி
இப்படியெல்லாம் நடக்குமா! ஆற்றில் கரை ஒதுங்கிய தாயின் சடலம்..விசாரணையில் வெளிவந்த உறையவைக்கும் உண்மை!

சிறுமியின் தந்தை ராகுல் ஒரு சலவை தொழிலாளி. இறந்த குழந்தையின் உறவினரான ரவிக்குமார் என்பவர், உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், “அந்த கோர நிகழ்வின்போது நாங்கள் வீட்டிற்குள் இருந்தோம். அவ்வழியே சென்ற ஒருவர்தான் இதுகுறித்து எங்களுக்கு தெரிவித்தார். உடனடியாக நாங்கள் அங்கே சென்று குழந்தையை பார்த்தபோது மிக மிக மோசமான நிலையில் அவள் இருந்தாள். அவளை சுற்றிலும் ரத்தம் வெள்ளமாய் காணப்பட்டது. அவளின் வலது காது நாய்களால் சிதைக்கப்பட்டிருந்தது.

நாய்கடித்து எங்கள் பகுதியில் ஒருவர் உயிரிழப்பது என்பது இது முதல் முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்திலேகூட மற்றொரு குழந்தை இதேபோன்றுதான் பலியானது. எப்படியாவது இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டுமென எண்ணி, இத்தெருநாய்களுக்கு உணவளிக்கும் ஒரு பெண்ணை அணுகி ஒத்துழைப்பு கொடுக்கும்படி கோரினோம். ஆனால் ஒத்துழைப்புக்கு பதிலாக மிரட்டல்தான் எங்களுக்கு வந்தது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் தாக்கியதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அரசு தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டு, இனப்பெருக்கத் தடை சிகிச்சை கொடுத்து மக்களை காக்குமா என்பதே அப்பகுதி மக்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com