விமானம் மூலம் பெங்களூரு வந்த 2 தென்னாப்பிரிக்கர்களுக்கு கொரோனா - தீவிர பரிசோதனை

விமானம் மூலம் பெங்களூரு வந்த 2 தென்னாப்பிரிக்கர்களுக்கு கொரோனா - தீவிர பரிசோதனை
விமானம் மூலம் பெங்களூரு வந்த 2 தென்னாப்பிரிக்கர்களுக்கு கொரோனா - தீவிர பரிசோதனை
Published on

நேற்று பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு தென்னாப்பிரிக்கர்களுக்கு கோவிட்-19  தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களின் சோதனை மாதிரிகள் கூடுதல் ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரை கர்நாடகாவில்  புதிய ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக யாரும் பாதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தென்னாப்ரிக்கர்கள் இருவரும் தனித்தனி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பதாகவும், அவர்கள் கொரோனா சோதனை எதிர்மறையாக வரும் வரை அங்கேயே இருப்பார்கள் என்றும் பெங்களூரு துணை ஆணையர் தெரிவித்தார். 10 'அதிக ஆபத்துள்ள' நாடுகளில் இருந்து இதுவரை பெங்களூருவுக்கு 584 பேர் இங்கு வந்துள்ளனர் என்றும், தென்னாப்பிரிக்காவில் இருந்து மட்டும் இதுவரை 94 நபர்கள் வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் சுதாகர் கூறுகையில், “ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் பெங்களூரில் தரையிறங்கியவுடன் ஆர்டி-பிசிஆர் எடுப்பார்கள். நேர்மறை கண்டறியப்பட்டால், அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்படுவார்கள். எதிர்மறை சோதனை செய்தவர்களுக்கும் வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும். நிலைமையைக் கண்காணிக்க விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளை நியமித்துள்ளோம். தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல் மற்றும் போட்ஸ்வானா நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளோம்” என தெரிவித்தார்

ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வருவதால் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கர்நாடக அரசு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com