45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு

45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு
45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள் நடுவானில் மோத இருந்த நிலையில் 45 விநாடிகளில் தப்பிய சம்பவம் இப்போது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இண்டிகோ விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கவுகாத்திக்கு கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதே போன்று கவுகாத்தியில் இருந்து கொல்கத்தாவுக்கு மற்றொரு இண்டிகோ விமானம் வந்து கொண்டு இருந்தது.  

கொல்கத்தாவுக்கு சென்ற விமானம் பங்களாதேஷ் எல்லையில், 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து சென்ற விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வான் எல்லையில் மாலை 5.10 மணியளவில் பறந்துகொண்டிருந்தது. 

பங்களாதேஷ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேட்டு கொண்டதால், கொல்கத்தா விமானம் 35 ஆயிரம் அடியில் பறக்கத் தொடங்கியது. இதனால் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை கவனித்த கொல்கத்தா விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், உடனடியாக சென்னையில் இருந்து சென்ற விமானத்தை வேறு பக்கம் திரும்பிச் செல்ல உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த விமானம் உடனடியாகத் திரும்பியது. இதனால், இரு விமானங்களும் மோதுவதற்கு 45 விநாடிகள் இருந்த சூழ்நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com