புனே | மது அருந்திவிட்டு கார் ஓட்டிய சிறுவனை காப்பாற்ற தொடர்ந்து எல்லை மீறும் முறைகேடுகள்...!

புனேவில், மதுபோதையில் சிறுவன் கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்த நிலையில், சிறுவனை காப்பாற்ற தொடர்ந்து பல குளறுபடிகள் நடந்துவருகிறது. அந்தவகையில், ரத்த மாதிரி பரிசோதனையில் முறைகேடு நடந்துள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
புனே கார் விபத்து
புனே கார் விபத்துமுகநூல்
Published on

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கல்யாண் நகர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை நேரத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர், மதுபோதையில் அதிவேகமாக Porsche ரக காரை இயக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தநிலையில், காரின் முன் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் அனிஸ் துனியா, அஸ்வினி கோஸ்டா என்ற தம்பதியின் மீது அது மோதியுள்ளது. இந்தவிபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அத்தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் அவரது குடும்பத்தினர். இது அடுத்தடுத்து அம்பலமாகி வரும் நிலையில், சிறுவன் மது அருந்தி இருந்தாரா என்பதை அறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் முறைகேடு நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

புனே கார் விபத்து
சூப்பர் மார்க்கெட்டில் மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்?

சம்பவ தினத்தன்று, விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மது அருந்தி இருந்தாரா என்பதை உறுதி செய்ய, அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அஜய் தவாரே, ஸ்ரீஹரி ஹர்னோர் என்ற இரண்டு மருத்துவர்கள் சிறுவனிடமிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவுளை திரித்து கூற முயற்சித்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே வழக்கிலிருந்து சிறுவனை விடுவிக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற குளறுபடிகள் நடக்குமென்று முன்கூட்டியே அறிந்த போலீசார், முன்னதாகவே, இரண்டு வெவ்வேறு இடங்களில் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக கொடுத்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

புனே கார் விபத்து
மதுபோதையில் 2 உயிர்களை பறித்த சிறுவன்!’300 வார்தையில் கட்டுரை எழுதவும்’என ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

இது குறித்து தெரிவித்த புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், “மே 19 காலை 11 மணியளவில், சசூன் மருத்துவமனையில் சிறுவனிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு மற்றொரு நபரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்செயலை ஸ்ரீஹரி ஹல்னர் என்ற மருத்துவர் செய்துள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​சசூன் மருத்துவமனையின் தடயவியல் துறையின் HOD அஜய் தவாடேயின் அறிவுறுத்தலின் பேரில், ஸ்ரீஹரி ஹல்னர் இதை மாற்றியமைத்ததைக் கண்டறிந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குளறுபடியை செய்த இரண்டு மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புனே கார் விபத்து
புனே | மதுபோதையில் கார் விபத்து - 17 வயது சிறுவனின் செயலை மறைக்க முயன்ற தாத்தாவும் கைது!

முன்னதாக, சிறுவன் கார் ஓட்டவில்லை என்றும் குடும்ப ஓட்டுநர்தான் ஓட்டினார் என்றும் அவரது தந்தை கூறியிருந்தார். பின் அந்த ஓட்டுநரே அதை மறுத்து, தன்னை அவர்கள் மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னதாக கூறினார். அதேபோல ‘கொண்டாட்ட மனநிலையில் சிறுவன் மது அருந்தவில்லை. மன அழுத்தத்தில் மது அருந்தினார்’ என அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். அதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

Arrested
Arrestedpt desk

இப்படியாக சிறுவனை காப்பாற்ற அவரின் தந்தை விஷால் அகர்வாலும், தாத்தாவும் தொடர்ந்து ஈடுபட்டு பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றனர். இந்த வரிசையில், தற்போது ரத்த மாதிரி பரிசோதனையில் முறைகேடு நடந்திருக்கிறது.

இந்த வழக்கினை பொறுத்தவரை சிறுவன் சிறார் நீதிமன்றத்திலும், அவனது தந்தை மற்றும் தாத்தா, சிறுவனுக்கு மது கொடுத்த பார் உரிமையாளர் மற்றும் பார் ஊழியர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com