பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் வலைதளம் 2 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரதமர் மோடி மட்டுமே 2 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட தலைவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது யூடியூப் தளம் 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கடந்திருந்த நிலையில் தற்போது இந்த சாதனை படைத்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரா உள்ளார். இவர் 64 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளார். இது பிரதமர் மோடியின் சப்ஸ்க்ரைபர்களில் 3ல் 1 பங்கு மட்டுமே.
மூன்றாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 4.1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளார். இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோவும் 3.2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களோடு அடுத்த இடத்தில் உள்ளார்.
1.1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களோடு உக்ரைனியன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மொத்தமாகவே 7 லட்சத்து 94 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்களை மட்டுமே பெற்றுள்ளார்.
பார்வையாளர்கள் பார்வையிட்ட நிமிடங்களைப் பொறுத்தவரை, மொத்தமாக பிரதமர் மோடியின் யூ டியூப் தளம் 2.24 பில்லியன் வியூவ்ஸ்களை பெற்றுள்ளது. இது இரண்டாவது அதிகமான வியூவ்ஸ்களைக் கொண்ட உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி பெற்ற வியூவ்ஸ்களை விட கிட்டத்தட்ட 43 மடங்கு அதிகமாகும்.
இத்தகைய மதிப்பீடுகள் நவீன யுகத்தில் டிஜிட்டல் அரசியலில் செலுத்தும் தாக்கத்தையும் சேர்த்தே காட்டுகின்றன. பிரதமர் மோடி பிரதமராக போட்டியிட்டதில் இருந்தே டிஜிட்டலின் தேவையையும் அதன் தாக்கத்தையும் உணர்ந்து அதைப் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் 76% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.