ஜி20 நாடுகளின் நிதி - மத்திய வங்கி பிரதிநிதிகளின் முதல் உயர்மட்டக் கூட்டம் இன்று தொடக்கம்!

ஜி20 நாடுகளின் நிதி - மத்திய வங்கி பிரதிநிதிகளின் முதல் உயர்மட்டக் கூட்டம் இன்று தொடக்கம்!
ஜி20 நாடுகளின் நிதி - மத்திய வங்கி பிரதிநிதிகளின் முதல் உயர்மட்டக் கூட்டம் இன்று தொடக்கம்!
Published on

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அதுதொடர்பான மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 
இதனையொட்டி, இந்தியாவில் முதல்முறையாக ஜி20 நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்டக் கூட்டம் பெங்களூருவில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

கூட்டத்தில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா மற்றும் ஜி20 நாடுகள், இந்தியா அழைத்துள்ள சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். உலக பொருளாதார பிரச்னைகள், சர்வதேச நிதியியல் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிதி, நிலையான நிதி, உலக சுகாதாரம், சர்வதேச வரி விதிப்பு முறைகள் உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.  மேலும் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற மையப்பொருளில் குழு விவாதம், கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com