“பாஜக வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்கு” - ஆய்வு முடிவு

“பாஜக வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்கு” - ஆய்வு முடிவு
“பாஜக வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்கு” - ஆய்வு முடிவு
Published on

மக்களவைத் தேர்தலுக்கான 184 பெயரைக் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதில் 19 சதவிகிதம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

184 பாஜக வேட்பாளர்களில் 35 பேர் குற்றவியல் புகாருக்கு உள்ளானவர்கள் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த 35 பேரில் அதிகபட்சமாக மத்திய உள்துறை அமைச்சக இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்கா ராம் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அடுத்தபடியாக ஒடிசாவின் பாலசோர் தொகுதியில் போட்டியிடும் பிரதாப் சாரங்கி மீது 10 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன‌. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக மக்களவை உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்களாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ‌106 பேர் புதுமுகங்கள் என்பதால் அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகுதான் எத்தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து தெரியவரும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com