ஆக்ரா: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 4 இளைஞர்கள்... சாதுர்யமாக செயல்பட்ட 18 வயது மாணவி!

ஆக்ராவில் பூஜைப்பொருட்கள் விற்கும் 18 வயது மாணவி ஒருவர், யமுனா ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 4 நான்கு இளைஞர்களின் உயிரை சாதுர்யமாக காப்பாற்றியுள்ளார்.
ஆக்ரா
ஆக்ராமுகநூல்
Published on

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள படேஷ்வர் என்ற இடத்தில் மோகினி கோஸ்வாமி (18 வயது) என்ற மாணவியொருவர், அங்குள்ள அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வருகிறார். படிப்புக்கிடையே பகுதிநேர வேலையும் செய்துவந்துள்ளார் அவர்.

அப்படி 2 தினங்களுக்கு முன் இவர் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களை விற்றுக் கொண்டிருந்தபோது, யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரோடு அடித்து செல்லப்பட்டதை கண்டுள்ளார். சற்றும் தாமதிக்காமல் தன் உயிரையும் துச்சமென நினைத்த மோகினி கோஸ்வாமி ஆற்றில் குதித்துள்ளார்.

பிறகு, நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்களையும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்துள்ளார். ஃபிரோசாபாத்தை சேர்ந்த அந்த விளைஞர்கள் கடந்த செவ்வாய் (செப் 17) மாலையன்று, யமுனை ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தனது மகளின் வீரச்செயலை குறித்து தெரிவித்த மோகினியின் தாய், “சிறுவயதில் இருந்தே மோகினிக்கு நீச்சல் பிடிக்கும். பல நேரம், நீச்சலுக்கென தனி நேரம் ஒதுக்குவாள். ஆனால், இப்படி ஒருநாள் நான்கு உயிர்களை காப்பாற்றுவாள் என்று எனக்கு தெரியாது. என் மகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், இளம் பெண்ணின் இச்செயலுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என்று அருகிலிருந்த பழமையான சிவன் கோவிலின் மேனேஜர் ஒருவர் நிர்வாகத்திடம் பரிந்துரையும் செய்துள்ளார்.

ஆக்ரா
விருதுநகர்: வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கு - தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் கைது

இந்நிலையில், மோகினியின் தன்னலமற்ற இந்த செயலுக்காக உள்ளூர்வாசிகள், அதிகாரிகளென அனைவரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com