தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!

தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!
தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!
Published on

அசாமில் ஊரடங்கு உத்தரவால் 25 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் 100 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரது வீட்டை அடைந்துள்ளார்.

அசாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் சருபதர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா கோகாய். 25 வயது விதவை பெண்ணான இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அஞ்சனா, ஜார்ஹட் மாவட்டம், லாஹிங்கில் உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல விரும்பியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 8 நாட்களில் 100 கிலோமீட்டரை கடந்து அவரின் ஊரை அடைந்தார். வழியில் உள்ள கிராமத்தினர் அவருக்கு அவ்வபோது உதவியுள்ளனர். வீட்டிற்கு செல்லும் சிறிது தூரத்திற்கு முன்னர் போலீசார் அவரை மீட்டு வீட்டில் நிவாரணம் அளித்து வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து மரியானி காவல் நிலைய ஆய்வாளர் திலக் போரா கூறுகையில், “அந்தப் பெண்ணைப் பற்றி பொதுமக்கள் எங்களுக்குத் தெரிவித்ததும் நான் ஒரு குழுவை அனுப்பினேன். அந்த குழு ரயில் டவுன்ஷிப்பின் புறநகரில் உள்ள நேத்துன்மதி பகுதியில் இருந்து அந்த பெண்ணை மீட்டது. அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் வந்தவுடனேயே அவர்களின் உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களை வீட்டில் விட்டோம். அவர் தனது மாமியாரால் சரியாக நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இந்த நேரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com