தோட்டத்தை பராமாரிக்க, துணிகளை துவைக்க 18 போலீஸ்காரர்கள்

தோட்டத்தை பராமாரிக்க, துணிகளை துவைக்க 18 போலீஸ்காரர்கள்
தோட்டத்தை பராமாரிக்க, துணிகளை துவைக்க 18 போலீஸ்காரர்கள்
Published on

கர்நாடகாவில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மாண்டியா மாவட்ட எஸ்.பி. ராதிகா வீட்டில் அவரது சொந்த வேலைகளை செய்ய 18 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவரது வீட்டில் எத்தனை பேர், எதற்காக பணியாற்றுகிறார்கள் என்பதை விளக்கி ஒரு வீடியோ லீக்கானது. அதில் தோட்டத்தை பராமரிக்கவும், வீட்டு வேலைகளை செய்யவும், அவரது குடும்பத்தினரின் துணிகளை துவைக்கவும் ஒன்றல்ல, இரண்டல்ல, 18 காவலர்கள் ஆர்டர்லியாக சட்டவிரோதமாக பணிபுரிகின்றனர்.

வீடியோ குறித்து பதிலளித்த எஸ்பி ராதிகா, இந்த வீடியோ முழுக்க முழுக்க பொய் என்றதோடு, காவலர்கள் அனைவரும் அவர்கள் விருப்பத்தின் பேரிலேயே பணிபுரிகின்றனர் என்றும், ஒரு மூத்த அதிகாரியின் வீட்டில் பணியாற்ற அவர்கள் தானே விரும்பிச் செய்வதை ஆர்டர்லி என தவறாக பரப்புகின்றனர் என விளக்கமளித்தார். முன்னதாக சித்தராமையா கர்நாடக முதல்வராக இருந்த போது ஆர்டர்லி முறை பிரிட்டிஷ் அரசால் காவலர்களை அடிமை போல் நடத்தும் முறை எனக் கூறி அதனை ரத்து செய்தார். ஏறக்குறைய 3000 போலீசார் ஆர்டர்லி முறையில் பணியாற்றி வந்தனர்

ராதிகாவின் விளக்கம் குறித்து விசாரித்த போது உதவி துணை காவல் ஆய்வாளர் பதவி வகிக்கும் 18 பேர் பணி புரிவதாகவும் , இவர்களில் 3 பேர் ராதிகாவின் குடும்பத்துக்கு ஓட்டுநர்களாக பணிபுரிவதாகவும் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகளை அணுகி விளக்கம் கேட்ட போது 18 பேர் வரைக்கும் இருப்பதெல்லாம் சட்டப்படி தவறு என்றும், ராதிகா இருப்பது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பங்களா என்பதால் அங்கு அரசு ஊழியர்களே பணியில் இருக்கிறார்கள். இது ஆர்டர்லி முறையில் அவர் பணியமர்த்தினாரா என தெரியவில்லை, 3 பேருக்கு மேல் பணியில் வைத்துக் கொள்ளவும் முடியாது எனவும் தெரிவித்தனர். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ராதிகா வீட்டில் காவலர்கள் பணியில் இருப்பது போல் நிறைய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை அங்குள்ள காவலர்களே பணிச்சுமை காரணமாக வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com