தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019-ல் கொரோனா பரவல் ஆரம்பமாகி அடுத்த ஆண்டே அதன் உச்சத்தை எட்டியது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தாக்கம் படிப்படியாக குறைந்தது. பல்வேறு நிலைகளில் தொற்று உருமாற்றம் அடைந்த நிலையில், இன்னமும் ஆங்காங்கே பாதிப்புகள் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி 67 பேரிடம் மேற்கொண்ட சோதனையில், சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் இது குறித்து பயம் கொள்ள வேண்டாம் எனவும், தொற்று ஏற்பட்டால் ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் பொது சுகாதராத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.