கூடியது மழைக்கால கூட்டத்தொடர் : 17 எம்பிக்களுக்கு கொரோனா

கூடியது மழைக்கால கூட்டத்தொடர் : 17 எம்பிக்களுக்கு கொரோனா
கூடியது மழைக்கால கூட்டத்தொடர் : 17 எம்பிக்களுக்கு கொரோனா
Published on

இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் 17 எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் மழக்கால கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் இன்று முதல் அக்டோபர் 1 வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் சமூக இடைவெளிகள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் எம்.பிக்கள் அமர்ந்தனர்.

மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், மீனாக்‌ஷி லேகி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங், உள்ளிட்ட 17 எம்.பிக்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜகவில் 12 எம்.பிக்களுக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் 2 எம்.பிக்களுக்கும், சிவசேனாவில் ஒரு எம்பிக்கும், திமுகவில் ஒரு எம்பிக்கும், ஆர்.எல்.பியில் ஒரு எம்பிக்கும் என மொத்தம் 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை கைவிடக் கோரி திமுக, காங்கிரஸ், இடதுசாரி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com