சோறு தண்ணியில்லாமல் ஓய்வில்லாமல் பப்ஜி விளையாட்டு.. பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்

சோறு தண்ணியில்லாமல் ஓய்வில்லாமல் பப்ஜி விளையாட்டு.. பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்
சோறு தண்ணியில்லாமல் ஓய்வில்லாமல் பப்ஜி விளையாட்டு.. பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்
Published on

ஊரடங்கு நாட்களில் குழந்தைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் பெரிய பொழுதுபோக்காக மாறியுள்ளன. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பல நாட்கள் சாப்பிடாமல் பப்ஜி கேம்ஸூக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஆன்லைன் விளையாட்டால் இந்தியாவில் நேர்ந்த இரண்டாவது மரணம் எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் வீட்டில் இருந்தபடியே அந்தச் சிறுவன் ஆன்லைன் விளையாட்டில் பல மணி நேரம் ஈடுபட்டுவந்திருக்கிறான். தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பதைக்கூட அவன் மறந்துவிட்டான். பல நாட்கள் சாப்பிடவும் இல்லை.

இதனால் நீரிழப்பு ஏற்பட்டு அந்தச் சிறுவன் எல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இதேபோன்று இன்னொரு சம்பவம் புனேயில் நடந்தது. அங்கு ஆன்லைனில் தொடர்ந்து விளையாடியதால் 25 வயதுள்ள ஹர்சால் என்ற இளைஞன் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com