16வது மக்களவையின் பணிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதன் சிறப்புகள் பற்றியும் முந்தைய 15வது மக்களவை செயல்பாடுகளுடன் ஒப்பீட்டையும் பார்க்கலாம்.
16வது மக்களவையின் பணிக்காலத்தின் போது ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை கைவிப்பட்டது. மேலும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையும் இந்த மக்களவை காலக்கட்டத்தில்தான் அமலுக்கு வந்தது. 16ஆவது மக்களவையில் ஒரே ஒரு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்தாண்டு ஜூலை மாதம் கொண்டு வரப்பட்ட அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
15வது மக்களவையில் எழுத்து மூலம் பதில்அளிக்க கோரி 73 ஆயிரத்து 16கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் 16வது மக்களவையல் இது 73 ஆயிரத்து 405 ஆக அதிகரித்தது. வாய்மொழியாக பதில் தேவைப்படும் 650 கேள்விகள் முந்தைய அவையில் கேட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.