மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 20 வயது பெண்ணின் வயிற்றிலிருந்த 16 கிலோ கட்டியை ஆறே மணிநேரத்தில் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை மேலாளர் ஏ.என்.ஐக்கு கொடுத்த தகவலில், ‘’அறுவைசிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த பெண் ராஜ்கரிலிருந்து சிகிச்சைக்காக வந்திருந்தார். நடக்கும்போதும் சாப்பிடும்போதும் வயிற்றில் கடுமையான வலி ஏற்படுவதாகக் கூறினார். பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கருப்பையில் மிகப்பெரிய அளவில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அந்த பெண்ணின் எடை 48 கிலோ. கட்டியின் எடை 16 கிலோ.
அந்தப் பெண் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்ததால் மருத்துவமனைக்கு வந்த இரண்டே நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை) அறுவைசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை நிபுணர்கள் 6 மணிநேரமாக போராடி அந்த பெண்ணின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டியை அகற்றியுள்ளனர்’’ என்று கூறினார்.