சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதன் 15வது ஆண்டு நினைவு தினம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு இதே நாளன்று எழுந்த ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட கோர நிகழ்வு மாறாத வடுவாய் உள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பேரலைகள் பொங்கி எழுந்தன. இது இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை பலி கொண்டது.
தமிழ்நாட்டில் சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அனுசரிக்கப்படுகின்றது.