15 பாஜக MLA-க்கள் சஸ்பெண்ட்... ராஜினாமா செய்த காங். அமைச்சர்! என்னதான் நடக்கிறது இமாச்சல் அரசியலில்?

இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம் எல் ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இமாச்சல் அரசியல் பரபரப்பு
இமாச்சல் அரசியல் பரபரப்புட்விட்டர்
Published on

இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் ஹரியானாவில் பாஜக தலைவர்களை சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் பாஜக வெற்றி

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களை வென்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அம்மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாகவே, உட்கட்சி பூசல் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இமாச்சல் பிரதேசத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 6 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான 25 தொகுதியை கொண்ட பாஜவிற்கு தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். மேலும் சுயேட்சை உறுப்பினர்களும் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.

இதனால் பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஹர்ஷ் மகாஜன் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்து, 25 வேட்பாளர்களை கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றியடைந்தது காங்கிரஸின் உட்கட்சி பூசலை வெளிச்சம்போட்டுக்காட்டியது.

இமாச்சல் அரசியல் பரபரப்பு
“நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ள நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” - ராகுல் காந்தி

6 சட்டமன்ற உறுப்பினர்கள்

இதையடுத்து வாக்குபதிவுக்கு பிறகு 6 சட்டமன்ற உறுப்பினர்களும் அவசர அவசரமாக ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து இன்று சிம்லாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மைக்கு 35 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற நிலையில், 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக தலைவர்களை சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. (40 பேரில் 6 பேர் கட்சித்தாவல் செய்தால், காங்கிரஸ் ஆட்சி தடுமாறும்)

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

இப்படியாக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற சூழலில், பாஜக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

இதனால் இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆட்சியை காப்பாற்றி கொள்ள காங்கிரஸ் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இமாச்சல் அரசியல் பரபரப்பு
“தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன!” - பிரதமர் மோடி பேச்சு

சிம்லா விரைந்த கர்நாடக துணை முதல்வர்

இந்நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார், ஹரியான முன்னாள் முதல்வர் குபேந்திர சிங் உள்ளிட்டோர் சிம்லா விரைந்துள்ளனர். இதன்மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்சியில் இருந்து விலகாமல் இருக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார்
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார்

ராஜினாமா

அந்த ஆறுபேர் போக இன்னுமொருவர் பாஜக-விற்கு தேவை என தகவல் பரவிய நிலையில், இம்மாச்சல பிரதேசத்தில் அமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த விக்ரமாதித்யா தீடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அம்மாநில முதல்வருக்கு எதிராகவும் பல கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விக்ரமாதித்யா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மற்றும் அசாம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவிகளில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் விரைவில் அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இமாச்சல பிரதேச அரசியல் களம் பரபரப்பில் மூழ்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com