நொடிப்பொழுதில் Money Transfer.. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரித்த UPI பயன்பாடு!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UPI பரிவர்த்தனை
UPI பரிவர்த்தனைமுகநூல்
Published on

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம்  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கிய பங்காற்றுகிறது.

நகரம் முதல் கிராமம் வரை யுபிஐ பரிவர்த்தனை செயல்பாட்டில் உள்ள நிலையில் ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் என யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

இது கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 92 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளாக இருந்துள்ளது. இதனால் யுபிஐ பரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

UPI பரிவர்த்தனை
சென்னையில் இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்

அதில், “கடந்த 2017ஆம் நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இது 2022 ஆம் நிதியாண்டில் 139 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளில் யுபிஐ பரிவர்த்தனை தொகையை ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com