இரவு நேரங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு உள்ளே, வெளியே போக்குவரத்துகளுக்கு தடை விதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 100 சதவித இலக்கை ஏற்படுத்தி அதனை அடையவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிந்துக்கொள்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் மற்றும் இதர பொது போக்குவரத்துகளில் 50 சதவித பயணிகளை அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.